தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு
மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளை (8) கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாற்று கல்வி நடவடிக்கை
பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த கோரிக்கைக்கு அமைய, குறித்த மாகாணங்களின் ஆளுநர்களால், மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மேல் மாகாணத்திலுள்ள அனைத்து வலய கல்வி பணிப்பாளர்களும் தமக்கு கீழ் இயங்கும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு 09 அன்று உரிய விடுமுறையை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஜீ.எல்.வர்ணன் பெரேரா கையொப்பமிட்டுள்ள உத்தியோகபூர்வ கடிதம் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை வழங்கப்படவுள்ள இந்த விசேட விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பெரும் பிளவு! தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்வதிலும் சிக்கல்