மழை அங்கியுடன் மீட்கப்பட்ட என்புக்கூடு: ஓகஸ்ட் 4ஆம் திகதிக்குப் பின்பே அகழ்வு
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட, மழை அங்கியுடன் கூடிய சிறுவரின் என்புக்கூடு எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதிக்குப் பின்னரே முற்றாக அகழ்ந்து எடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
"செம்மணி மனிதப் புதைகுழிக்குள் மழை அங்கியுடன் காணப்பட்ட மேற்படி சிறுவரின் என்புக்கூடு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை உடனடியாக அகழ்ந்து எடுக்கப்படவில்லை.
அகழ்வதற்கான நடவடிக்கை
இது தொடர்பாகத் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே அதனை அகழ்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இந்த என்புக்கூடு சட்ட ரீதியாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற அனுமானம் காணப்படுவதால், அது தொடர்பான விவரங்கள் அல்லது தகவல்கள் எவருக்கேனும் தெரிந்திருந்தால், உடனடியாக நீதிமன்றப் பதிவாளருக்காவோ, சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்துக்கோ அல்லது காணாமல் போனோருக்கான அலுவலகத்துக்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இந்தச் சம்பவம் தொடர்பான உண்மையான தகவல்கள் ஏதேனும் வெளிச்சத்துக்கு வந்தால், அது செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பான பல முக்கிய உண்மைகளைக் கண்டறிய உதவும்" என்றார்.
அமெரிக்க குண்டுவீச்சு விமானங்களுக்கு அனுமதி அளித்தால் தாக்குதல்: பிரித்தானியாவுக்கு ஈரான் எச்சரிக்கை
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam