அமெரிக்க குண்டுவீச்சு விமானங்களுக்கு அனுமதி அளித்தால் தாக்குதல்: பிரித்தானியாவுக்கு ஈரான் எச்சரிக்கை
ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்கு அமெரிக்காவின் B-52 குண்டுவீச்சு விமானங்கள் பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி அளிக்கக் கூடாது என ஈரான் எச்சரித்துள்ளது.
இங்கிலாந்தின் 'ஆர்.ஏ.எஃப் ஃபேர்ஃபோர்டு' தளத்திலிருந்து அமெரிக்க விமானங்கள் இயங்கினால், அந்த தளங்கள் தங்களின் தாக்குதலுக்கு உரிய இலக்காகும் என ஈரான் கூறியுள்ளது.
இதற்குக் பதிலளித்த பிரித்தானியா, உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ தங்கள் மீது நடத்தப்படும் எந்தத் தாக்குதலையும் எதிர்கொள்ள ஆயுதப் படைகள் தயார் நிலையில் இருப்பதாகக் கூறியுள்ளது.
ஈரான் எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேசக் கப்பல்களைப் பாதுகாக்க, அமெரிக்காவுடனான தற்காப்பு ஒப்பந்தங்களின்படி தொடர்ந்து செயல்படுவோம் என பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க-பிரித்தானியக் கூட்டுத் தளமான 'டியாகோ கார்சியா' மீது ஈரான் ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்தியிருந்தது.
அரசு ஆதரவு பெற்ற மறைமுகக் குழுக்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளக் கொண்டுவரப்பட்ட புதிய சட்டப் அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஈரானின் புரட்சிகர காவல்படைக்கு ஆதரவு அளிப்பதை பிரித்தானியா இந்த மாதத்தில் அதிகாரப்பூர்வமாகத் தடை செய்துள்ளது.
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri