மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கு – ஜனவரியில் மீண்டும் விசாரணை
இலங்கையின் சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கு, எதிர்வரும் 2027 ஜனவரி 28ஆம் திகதி முன்விசாரணை மாநாட்டிற்காக மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட பலருக்கு எதிராக
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட பலருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று பெர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களான அர்ஜுன் அலோசியஸ், ஜெஃப்ரி அலோசியஸ் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
எனினும்,சில பிரதிவாதிகளுக்கு தேவையான ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை என அவர்களது சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, எஞ்சிய ஆவணங்களை அடுத்த வழக்குத் தினத்திற்கு முன்னர் வழங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, 2015 பெப்ரவரி 27ஆம் திகதி இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி ஏலத்தின் மூலம் அரசுக்கு 688 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பிரதிவாதிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அடுத்த வழக்குத் திகதி 2027 ஜனவரி 28 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சற்றுமுன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல்! பிணை கோரிக்கை தொடர்பில் பிறப்பிக்கப்படவுள்ள உத்தரவு