மின்சார சபையின் மறுசீரமைப்பு பொது மக்களுக்கு நன்மையளிக்க வேண்டும் : சாணக்கியன்
மின்சார சபை மறுசீரமைக்கப்பட வேண்டுமானால் அந்த சீரமைப்பானது பொதுமக்களுக்கு நன்மையளிக்க வேண்டுமே தவிர அரசியல்வாதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் நன்மையளிப்பதாக இருக்கக் கூடாது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (05.01.2024) நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
மறுசீரமைக்கப்பட வேண்டியவை
நேற்றைய தினம் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தயாராகுவதாகவும் மின்சார சபையின் சில பிரிவுகளை தனியார் மயப்படுத்தப்படவுள்ளதை எதிர்த்து ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது.
உண்மையில் இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இரண்டும் மறு சீரமைக்கப்பட வேண்டிய விடயங்கள்.
அதாவது இந்த இரண்டு அமைப்புகளும் வருமானம் மற்றும் செலவுகளை பொறுத்து மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் மாற்று நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
வெளிப்படையில்லாத் தன்மை
ஆனால் இன்று இலங்கை மின்சார சபையில் இருக்கின்ற ஊழியர்கள் வீதியில் வந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கான பிரதான காரணம் மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் இவற்றிற்கு பொறுப்பாக இருக்கின்ற அமைச்சர் காஞ்சன விஜயசேகர அவர்களுடைய வெளிப்படையில்லாத் தன்மை.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான நூற்றுக்கு மேலதிகமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சினோபக் நிறுவனத்திற்கு ஒரு ரூபாய் கூட பணம் அற விடாமல் இலவசமான முறையில் குத்தகைக்கு கொடுத்துள்ளனர்.
நேற்றைய தினம் மின்சார சபையிலே நிறைவேற்று பணிப்பாளர் வெளியிட்ட ஒரு அறிக்கையிலே மின்சார சபையில் இருக்கின்ற ஊழியர்களோ அல்லது வேலை செய்பவர்களோ தொழிற்சங்க நடவடிக்ககைகள் தொடர்பாக தங்களுடைய சமூக வலைத்தளங்களில் எதுவும் பதிவிட கூடாது என குறிப்பிட்டார்.
மின்சார சபையிலே வேலை செய்கின்ற ஊழியர்களை அடக்குமுறைக்குள்ளே கொண்டு செல்கின்றார்கள் ஒருவருக்கும் தெரியாமல் தாங்கள் செய்யப் போகின்ற ஊழல் மோசடிகளுக்கு இவர்கள் வாய் திறக்க கூடாது என்று குறிப்பிடுகின்றார்கள்.இலங்கை மின்சார சபையிலே இருக்கின்ற ஊழியர்கள் உண்மையான நிலவரங்களைப் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தாவிட்டால் நாங்கள் எங்கு சென்று அறிவது.
சுகாதாரத் துறையில் மோசடி
தற்போது சுகாதாரத் துறையில் எத்தனையோ மோசடிகள் இடம் பெறுகின்றன. புற்றுநோய் இருப்பவர்களுக்கு கூட கொண்டு வந்த மருந்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியினை உருவாக்குகின்ற அந்த தன்மையுள்ள மருந்து இல்லாமல் ஏற்றப்படுகின்றது.
இவ்வாறான காரணங்களில் தான் கடந்த காலத்தில் சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டது.
இவற்றைவிட, பல கோடிக் கணக்கில் வைப்பில் பணம் உள்ளவர்களிடம் வரி அறவிடாமல் இலகுவாக கஷ்டப்பட்ட மக்கள் மீது வரியை அரசாங்கம் அதிகரித்திருக்கின்றார்கள்.
இதற்கு எமது மாவட்டத்தில் இருக்கின்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் ஆதரவாக வாக்களித்து இருக்கின்றார்கள்.
இதிலே மட்டக்களப்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் எதிராக வாக்களித்தவன் நான் ஒருவர் மட்டும்தான்.” என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ் தலைவர்கள் பெற்றது எதுவுமில்லை ஆயினும் வாய்ச் சொல்லில் வீரரடி..! 18 மணி நேரம் முன்

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

யூடியூப் வீடியோவுக்காக காதலருடன் நெருக்கம் காட்டிய பெண்: கணவர் கண்டித்ததால் எடுத்த பயங்கர முடிவு News Lankasri
