அம்பாறையில் நாடாளுமன்ற வேட்பாளருடைய ஆதரவாளரின் கடை அடித்து உடைப்பு
இனந்தெரியாதோரினால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் ஒன்றில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் வைத்தியர் பிரகாஸின் ஆதரவாளரது கடை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு தாளவட்டுவான் பிரதான வீதியில் அமைந்துள்ள தற்காலிக கடை ஒன்றே இவ்வாறு நேற்று (27.10.2024) அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக சங்கு சின்னத்தில் இலக்கம் 5இல் போட்டியிடும் வேட்பாளர் வைத்தியர் பிரகாஸின் ஆதரவாளரது கடையே இவ்வாறு அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடு
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு குறித்த வேட்பாளர் சென்று சேதமடைந்த கடையை பார்வையிட்டதுடன் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு அளிக்க ஆதரவாளருடன் சென்றுள்ளார்.
இதன்போது, பொலிஸ் நிலையத்தில் குறித்த முறைப்பாடு ஏற்றுக்கொள்ளாமையின் காரணமாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் இன்று முறைப்பாடு செய்ய எண்ணியுள்ளதாக பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், குறித்த கடையில் அரசியல் விடயங்களை தாங்கள் உரையாடுவதாகவும் இதனால் இந்தக் கடை ஏனைய தரப்புகளால் உடைக்கப்பட்டிருக்க கூடும் எனவும் வேட்பாளர் பிரகாஸ் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan