அரசியல் மாற்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ள யாழ். மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம்
புதிய ஒரு அரசாங்கத்தை தமது வாக்குப்பலத்தின் மூலம் தேர்ந்தெடுத்து இனிமேல் இனவாத அரசியலுக்கு தென்னிலங்கையில் இடமில்லை என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளதைப் போன்றான, ஒரு அரசியல்மாற்றத்தை நோக்கியே எமது இளையதலைமுறை சுயேட்சைவேட்பாளர்களும் முன்னெடுத்து தம்மை களமிறக்கி உள்ளனர் என யாழ். மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த மாணவர் ஒன்றியத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் அன்றாட பிரச்சினைகள்
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும், எந்த அரசியல்கட்சிக்கு ஆதரவு நிலைப்பாடு எடுக்கவேண்டும் என்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு.

மிகக்கடுமையான அரசியல் நெருக்குவாரங்களுக்குள் தனித்துநின்று களத்திலே அத்தனை சோதனைகளையும் இன்றும் தாங்குபவர்கள் நீங்களே.
உங்கள் வாக்குரிமைக்குள் யாரும் தலையிடுவதோ. மற்றவர்களின் அரசியல் அபிலாசைகளை உங்களுக்குள் திணிப்பதோ அருவருக்கத்தக்க செயலே அன்றி வேறில்லை.
அவ்வாறானதொரு அநாகரிக செயலை யாழ் மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் ஒரு போதும் செய்யாது.
ஆதலால், தென்னிலங்கையில் ஏற்பட்டது போல ஒரு அரசியல்மாற்றம் எமது மண்ணிலும் நிகழவேண்டும். அதன்மூலம் எமது மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு ஒருதீர்வு கிடைக்கவேண்டும்.
இந்த வரலாற்று அழைப்பிலிருந்து நீங்கள் ஒருபோதும் ஒதுங்கிவிடக்கூடாது என்பதே எமது விருப்பமாகும். அதுவே எமது இனக் காவல்தெய்வங்களுக்கு நாம்செலுத்தும் நன்றியாகும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri