கேப்பாப்புலவு காணிகளை விடுவிக்க கோரி மனு கையளிப்பு
முல்லைத்தீவு - கேப்பாப்புலவு காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட அரச அதிபரிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுவானது இன்றையதினம் (24.10.2024) காலை கையளிக்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு - கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளினை மீட்டுத் தருமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
ஆளுனர் வருகை
சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம், கேப்பாபிலவு கிராமமக்கள் இணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிபரிடம் மனுவினை ஒப்படைத்துள்ளனர்.
எதிர்வரும் மாதம் 8 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு ஆளுனர் வருகை தரவுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் நேரில் கதைப்பதாகவும் குறித்த மக்களிடம் தெரிவித்திருந்தார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மக்கள், “பல வருடகாலமாக தாம் தமது காணிகளை இழந்து சிரமங்களுக்கு மத்தியில் வாழ்வதாகவும் பல போராட்டங்கள் செய்தும் இதுவரை தீர்வு இல்லை என்றும் தமது காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மக்களின் குடியிருப்புக்கள் காணிகள்
கேப்பாப்புலவு மக்களின் ஒருபகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் இன்னும் மக்களின் குடியிருப்புக்கள் காணிகள் இன்றும் இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது.
அதனை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்திருந்தனர்.
இதேவேளை கடந்த (21.9.2024) அன்றையதினம் வடக்கு மாகாண ஆளுனர் நா.வேதநாயகனை குறித்த மக்கள் நேரில் சந்தித்து காணி விடுவிப்பு தொடர்பாக மனுஒன்றினை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |