முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளரை கடத்திச் சென்று தாக்குதல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பிரத்தியேக செயலாளரை கடத்திச் சென்று தாக்கி பணம் மற்றும் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி - கடுகன்னாவ பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காணி தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தாய், தந்தை மற்றும் மகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
கண்டி -மெனிக்டிவல பிரதேசத்தில் வசிக்கும் முப்பத்து மூன்று வயதுடைய நபரே இவ்வாறு தாக்கப்பட்டு கடத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கடுகன்னாவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri