அறுகம்பை விவகாரம்! கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரும் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்
நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக இலங்கை வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பாகும்.
இவ்வாறு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் வகையில் சில சம்பவங்கள் இடம்பெறக் கூடும் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவல் கிடைத்ததும் உடனடியாக நடவடிக்கை எடுத்தோம்.
எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இன்று சரியாக ஒரு மாதம் ஆகிறது. இந்த ஒரு மாதத்தில் நாங்கள் பலமுறை சந்திப்புக்களை நடத்தியுள்ளோம்.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் கிடைத்ததும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் அறுகம்பை, பண்டாரவளை, மாத்தறை வெலிகம மற்றும் அஹுங்கல்ல கடற்கரைகளுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த மாத ஆரம்பத்தில் இருந்தே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்த விடயத்தில் பாதுகாப்பு சபையில் தீவிரமாக ஆராயப்பட்டது. புலனாய்வு அமைப்புக்களும், பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
