சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் சுற்றுலாப்பருவத்தில் இலங்கைக்கு வருகை தருமாறு உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப்பயணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
அனைத்து சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பாக தீவின் அழகை இரசிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சுற்றுலாப் பயணிகளும் நாட்டில் தங்கியிருக்கும் போது மிக உயர்ந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு
நாட்டிலுள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சும் எடுத்துள்ளதாக சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை அடுத்து அறுகம்பை பிரதேசத்திற்கு தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்க தூதரகம் தமது பிரஜைகளுக்கு எச்சரித்திருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து பல நாடுகள் தங்கள் நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தன.
இதனையடுத்து இலங்கையில் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த குற்றசாட்டில் இருவர் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதற்கமைய, நாட்டிலிலுள்ள அனைத்து வெளிநாட்டுப் பயணிகளது பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
