வடக்கிலுள்ள தமிழ் இனவாதிகளின் செயற்பாட்டை விமர்சித்த ஜனாதிபதி!
நாட்டை ஒன்றிணைப்பதற்கு இரு குழுக்கள் தடையாகவுள்ளன.ஒன்று வடக்கில் இருக்கும் தமிழ் இனவாதிகள் மற்றையது தென் பகுதியிலுள்ள சிங்கள இனவாதிகள்.
இவர்கள் வடக்கில் இருக்கும் விகாரைக்கு சென்று போயா தினத்தில் விகாரையை அகற்றுமாறு கூச்சலிடுகின்றனர்.அதற்கு சமமாக தென் பகுதி இனவாதிகள் அதே விகாரைக்கு போயா தினத்தில் செல்கின்றனர்.
குழப்பதை ஏற்படுத்துவதற்கு வேறு ஒன்றுக்குமில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இனவாதத்தில் மீண்டெழ முயற்சி
'டித்வா' சூறாவளியினால் முழுமையாக வீடுகளை இழந்த குடும்பங்கள் மற்றும் மண்சரிவு அபாயம் அதிகமுள்ள இடங்களாக இனங்காணப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காக, 'Rebuilding Sri Lanka' திட்டத்தின் கீழ் காணிகளை வழங்குவதற்கும், வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதி உதவிகளை வழங்குவதற்குகான நிகழ்வில் நேற்று (06.012026) உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
அவர்களுக்கு மீண்டெழ தேவையாகவுள்ளது இனவாதம். எமது இனம்,மதம் என்னும் போது இரத்தம் துடிக்கும்.அது உண்மைதான்.அதை தான் அந்த சிறு குழு செய்து கொண்டிக்கிறது.

நாட்டில் இனி இனவாதத்திற்கு இடமில்லை.அதற்கான சட்டத்திடங்கள் போதாதென்றால்.உருவாக்கி முடிவு கட்டுவோம்.
பௌத்த தர்மம் மற்றும் எமது வரலாறு என்பது எமக்கு அரசியல் மேடைகளில் பயன்படுத்தப்படும் வெறும் கோஷங்கள் அல்ல. எமது கடந்தகால உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு நவீன உலகிற்கு ஏற்ற பொருளாதார மாற்றத்திற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என குறிப்பிட்டுள்ளார்.