பரபரப்பாகப்போகும் நாடாளுமன்றம்! சர்ச்சைக்குரிய சட்டமூலம் தொடர்பில் வெளியான தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் இம்மாதம் 17 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள நாடாளுமன்ற விவகாரக் குழு திட்டமிட்டுள்ளதாக அவைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் அன்றைய தினம் நிறைவேற்றப்படும் என்று அவர் கூறினார்.
நிறைவேற்றப்படும் திகதி
இந்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என்றும் பிரிவு 121(1) இன் கீழ் எளிய பெரும்பான்மையால் நிறைவேற்றப்படலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாகவும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நேற்று தெரிவித்தார்.

இந்த சட்டமூலம் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், சிறப்பு பெரும்பான்மை மற்றும் வாக்கெடுப்பு தேவை என்றும் முன்னாள் எம்.பிக்கள் தாக்கல் செய்த மனுக்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.