கடற்றொழிலாளர்கள் தாக்குதலை இந்தியா ஏற்றுக் கொள்ளவில்லை! ஆனந்த விஜயபால வெளியிட்ட தகவல்
இலங்கை கடற்றொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை இந்திய கடலோர பாதுகாப்பு படையணியினர் மறுத்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
ஹட்டன் பகுதியில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,
விசாரணைகள் ஆரம்பம்
தாக்குதல் சர்வதேச் கடல் எல்லையில் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.தாக்குதல் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளை கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எட்டு தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.இலங்கை கடற்படையும் தாக்குதலை உறுப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்துமாறு அரசாங்கம் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

இராஜதந்திர ரீதியில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.