கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர் கொலை விவகாரம்! வெளியான புதிய தகவல்
தலங்கம பிரதேசத்தில் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த கோடீஸ்வர வர்த்தகரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 27 வயதுடைய பிரதான சந்தேகநபர் விசாரணைக்காக வெள்ளவத்தை கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகரிடமிருந்து திருடப்பட்ட தொலைப்பேசியை கண்டுபிடிக்க வெள்ளவத்தை கடற்கரை பகுதிக்கு பொலிஸார் அழைத்துச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
சந்தேகநபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த வர்த்தகரை தாக்க பயன்படுத்திய தடி சடலம் மீட்கப்பட்ட வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை
கொலைக்குப் பிறகு, சந்தேகநபர்கள் வர்த்தகரின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பல்வேறு இடங்களில் பொருட்களை வாங்குவதைக் காட்டும் சிசிடிவி காட்சிகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கிடையில், உயிரிழந்த தொழிலதிபரின் உடல் தடய அறிவியல் மற்றும் நச்சுயியல் நிறுவனத்தில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு அவரது டிஎன்ஏ மாதிரிகளும் பெறப்பட்டுள்ளன.
இதேவேளை, பெலவத்தை வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட கோடீஸ்வர ஆடை வர்த்தகரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தம்பதியினரை எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல பிரதான நீதவான் சனிமா விஜேசுந்தர உத்தரவிட்டுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
