மகிந்தவை நாம் இலக்கு வைக்கவில்லை! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி

Colombo Mahinda Rajapaksa President of Sri lanka Nalinda Jayatissa
By Rakesh Sep 10, 2025 02:55 AM GMT
Report

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும். புதிய அரசமைப்பில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்ட பின்னர் இதற்குரிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

மேலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டமூலம்  மகிந்த ராஜபக்சவை  இலக்காகக் கொண்டு முன்வைக்கப்பட்டதல்ல. அது ஓய்வுபெற்ற அனைத்து ஜனாதிபதிகளுக்குப் பொதுவானதாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கட்டாரை தாக்கிய இஸ்ரேல்.. ட்ரம்ப் வெளியிடவுள்ள விசேட அறிவிப்பு

கட்டாரை தாக்கிய இஸ்ரேல்.. ட்ரம்ப் வெளியிடவுள்ள விசேட அறிவிப்பு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை

கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர்பில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்வைத்த கொள்கைப் பிரகடனத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அரசமைப்பு திருத்தத்தின் போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு மக்கள் எமக்கு ஆணையை வழங்கியிருக்கின்றனர்.

மகிந்தவை நாம் இலக்கு வைக்கவில்லை! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி | Executive Presidential System Sri Lanka

எனினும், புதிய அரசமைப்புக்கான நடவடிக்கைகளை நாம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. அதற்குச் சற்று காலம் எடுத்துக்கொள்வதில் பிரச்சினையில்லை என்று நினைக்கின்றோம்.

ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருட காலம் மாத்திரமே கடந்துள்ளது. அரசு பதவியேற்று பத்து மாதங்களே ஆகின்றன. எனினும், நாட்டின் அபிவிருத்திக்கான பல்வேறு அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில் முதலில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதே எமது இலக்காகும். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

இவற்றுக்கிடையில் ஊழல், மோசடிகளுக்கு எதிரான சுற்றிவளைப்புக்களிலும் அரசு ஈடுபட்டு வருகின்றது. சர்வதேசத்தின் நம்பிக்கையையும் பெற்று வருகின்றோம். இவற்றுக்கு மத்தியில் புதிய அரசமைப்புக்கான நடவடிக்கைகளையும் விரைவில் ஆரம்பிப்போம்.

 அதன் அடிப்படையிலேயே தற்போது முன்னாள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளால் திறைசேரிக்கு ஏற்படும் சுமை, அதனால் அதிகரிக்கும் மறைமுக வரி என்பவற்றால் தான் மக்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர். எனவேதான் அதனை நீக்குவதற்கான சட்டமூலத்தைச் சமர்ப்பித்துள்ளோம்.

மகிந்தவை நாம் இலக்கு வைக்கவில்லை! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி | Executive Presidential System Sri Lanka

இதற்கு எதிராக ஒரு தரப்பினர் நீதிமன்றம் சென்ற போதிலும், அதனை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சகல உறுப்பினர்களும் இதற்கு ஆதரவான வாக்களிப்பர் என்று நம்புகின்றோம்.

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளுக்காக திறைசேரி பெரும் சுமையை சுமக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் எண்ண வேண்டிய தேவை அவற்றுக்கு இல்லை என்று நினைக்கின்றோம். வாக்களிப்பின் போது இது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடுகளை அறிந்து கொள்ள முடியும்.

இது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மாத்திரம் இலக்கு வைத்து அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட மூலமல்ல. சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் சகல முன்னாள் ஜனாதிபதிகளும் அதற்கமைய செயற்படுவர் என எதிர்பார்க்கின்றோம் என  தெரிவித்துள்ளார். 

ஏறாவூரில் அதிர்ச்சி தரும் ஆயுதங்கள்! ஹிஸ்புல்லா தப்பியது எப்படி - அதிரடி காட்டும் STF + CID

ஏறாவூரில் அதிர்ச்சி தரும் ஆயுதங்கள்! ஹிஸ்புல்லா தப்பியது எப்படி - அதிரடி காட்டும் STF + CID

அடுத்தடுத்து கைதாகும் பெருங்குற்றவாளிகள்! சிறு குற்றங்களுக்குள் சிக்கவைக்கும் என்பிபி அரசாங்கம்

அடுத்தடுத்து கைதாகும் பெருங்குற்றவாளிகள்! சிறு குற்றங்களுக்குள் சிக்கவைக்கும் என்பிபி அரசாங்கம்

7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US