பறக்கும் வான விளக்குகளை பறக்கவிடும் மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சிறப்பு விழாக்களின் போது பறக்க விடப்படும் வான விளக்குகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாதுகாப்பு குறித்து நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இந்த வான விளக்குகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இந்த வான விளக்குகள் தரையில் விழுந்து தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
வான விளக்குகள்
வான விளக்குகள் பட்டாசு தொழிற்சாலைகள், பெட்ரோல் நிலையங்கள், எரிபொருள் சேமிப்பு பகுதிகள், வீடுகள், கட்டடங்கள் போன்றவற்றின் மீது விழுந்தால் உயிர் இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் பொதுமக்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்தி இதுபோன்ற செயல்களில் கவனமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.