கொழும்பில் கொலை செய்யப்பட்ட வர்த்தகர்! வாக்குமூலத்தில் சந்தேகநபர் வெளியிட்ட தகவல்
தலங்கம பிரதேசத்தில் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த கோடீஸ்வர வர்த்தகரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 27 வயதுடைய பிரதான சந்தேகநபர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் வழங்கிய நீண்ட வாக்குமூலத்தில் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
குறித்த வர்த்தகரை தனது நண்பர் கையடக்க தொலைபேசி செயலி மூலம் இனங்கண்டு கடந்த 30ஆம் திகதி பெலவத்தையில் உள்ள தனது வீட்டிற்கு ஆணுறைகளுடன் வருமாறு வர்த்தகர் அறிவித்ததை அடுத்து அங்கு சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொலைக்கான காரணம்
குறித்த வர்த்தகரிடம் 100,000 ரூபா பணம் கேட்டதாகவும், அவர் அதனை வழங்க மறுத்ததாகவும்,பின்னர் 20,000 ரூபாய் மேலதிகமாக தருமாறு கேட்டபோது, தொழிலதிபர் மறுத்தமையினால் தலையில் தடியால் தாக்கியதாகவும், பயத்தில் தொழிலதிபரின் உடலை நீச்சல் குளத்தில் தள்ளியதாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் கைத்தொலைபேசி மற்றும் வர்த்தகரின் கடனட்டைகளுடன் கொலன்னாவ சாலமுல்லவில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்கு சென்று மனைவியிடம் தமக்கு பிரச்சினை என்று கூறினேன்.இருவரும் பின்னர் காரில் ஏறி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றோம்.
அங்கு தொழிலதிபரின் கிரெடிட் கார்டு மூலம் இந்தோனேஷியா செல்வதற்கு இரண்டு விமான டிக்கெட்டுகளை பெற்ற நிலையில், விசா பெறுவதில் ஏற்பட்ட பிரச்சினையால் வெளிநாடு செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளது.
அதனையடுத்து திருகோணமலைக்கு சென்று அங்கு தங்கியிருந்த போது சந்தேகநபர் வர்த்தகரை கொன்றதாக மனைவியிடம் கூறியுள்ளார்.
பிரேத பரிசோதனை அறிக்கை
இதனை தொடர்ந்து சம்பவத்தை சந்தேகநபரின் அத்தையிடம் கூறியதையடுத்து, கடவத்தையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தவர்கள் குறித்து கந்தானை பொலிஸாருக்கு அறிவித்து, நேற்று (04) பிற்பகல் அவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் 27 வயதுடையவர் என்ற போதிலும் 23 வயதுடையவர் என போலியான தேசிய அடையாள அட்டை மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தியுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உயிரிழந்த தொழிலதிபரின் உடல் தடய அறிவியல் மற்றும் நச்சுயியல் நிறுவனத்தில் இன்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு அவரது டிஎன்ஏ மாதிரிகளும் பெறப்பட்டுள்ளன.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan
