பாடசாலை மாணவர்களை மதுபோதையில் சுற்றுலா ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி கைது
தம்புள்ளை பகுதியிலிருந்து 56 பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரை ஏற்றிக்கொண்டு திருகோணமலைக்கு சுற்றுலா சென்ற பேருந்து சாரதி, மதுபோதையில் இருந்த குற்றச்சாட்டின் பேரில் இன்று (01) அதிகாலை கந்தளாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சோதனை முன்னெடுப்பு
தம்புள்ளையில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து புறப்பட்ட இப்பேருந்து, கந்தளாய் குளத்திற்கு அருகில் வைத்து போக்குவரத்து பொலிஸாரால் மறித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போதே சாரதி மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சாரதி உடனடியாக கந்தளாய் தலைமையக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, பேருந்து கந்தளாய் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பேருந்தில் பயணித்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் பாதுகாப்பான வகையில், பொலிஸாரின் ஏற்பாட்டில் மாற்று சாரதி வரவழைக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தங்களது பயணத்தைத் தொடர அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இருந்திருந்தால் இதனைதான் செய்திருப்பார்! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
வழக்கு பதிவு
கைது செய்யப்பட்ட சாரதிக்கு எதிராக குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 12 மணி நேரம் முன்
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam