அரிசி இறக்குமதியில் சாதனைப் படைத்த அரசாங்கம்!அறிக்கையில் அம்பலமான விடயம்
கடந்த ஆண்டில் (2025) இலங்கை 1,84,750 மெட்ரிக் தொன் (ஒரு இலட்சத்து எண்பத்து நான்காயிரத்து எழுநூற்று ஐம்பது) அரிசியை இறக்குமதி செய்துள்ளது.
இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 40.7 சதவீத அதிகரிப்பு என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 2025 ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீதிக்கு இறங்கியவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றீர்கள்!நாமலின் முகத்துக்கே பேசிய ஆளும் தரப்பு எம்.பி
நெல் உற்பத்தியில் அதிகரிப்பு
2024 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த அரிசி இறக்குமதி 1,31,338 மெட்ரிக் தொன் (ஒரு இலட்சத்து முப்பத்தோராயிரத்து முந்நூற்று முப்பத்தெட்டு) ஆகும்.
அதேபோன்று, 2025 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த நெல் உற்பத்தி 5,53,000 மெட்ரிக் தொன் (ஐம்பத்தைந்து இலட்சத்து ஐம்பத்து மூவாயிரம்) ஆகும்.
மேலும் நாட்டில் நெல் உற்பத்தி 7.6 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலைமையின் காரணமாக சந்தையில் அரிசி விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் (Paddy Marketing Board) 2025 ஆம் ஆண்டில் 19,633 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டு விவசாயிகளிடமிருந்து 162,257 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் 2025 ஆம் ஆண்டில் விவசாயத் துறைக்காக மேற்கொள்ளப்பட்ட செலவீனம் 142 பில்லியன் ரூபாய் ஆகும். இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17 சதவீத அதிகரிப்பு எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.