வீதிக்கு இறங்கியவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றீர்கள்!நாமலின் முகத்துக்கே பேசிய ஆளும் தரப்பு எம்.பி
சுற்றுச்சூழல் பிரச்சினைக்காக வீதியில் இறங்கி போராடியவர்களுக்கு அன்று உங்கள் ஆட்சியில் துப்பாக்கியாலே பதில் கூறுனீர்கள்.இன்று உரிமைகளுக்காக வீதியில் இறங்கி போராடும் தொழிற்சங்கங்கள் பற்றி நாமல் ராஜபக்ச பேசுகிறார்.
வரலாற்றில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று இந்த நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயத் மனுவர்ன பேசியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம்
நேற்று நாடாளுமன்றத்தில் தேசிய சுற்றுச்சூழல் (திருத்தச்) சட்டமூலம்’ மீதான இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.தொடர்ந்துரையாற்றிய அவர்
2013 ஆம் ஆண்டில் ரத்துபஸ்வெல பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியேறிய கழிவுநீர் கிணறுகளில் கலந்ததற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்த போது ராஜபக்ச அரசாங்கம் என்ன செய்தது 17 வயது ப மாணவன் ஒருவனை சுட்டுக் கொன்றார்கள். மேலும் இருவர் கொல்லப்பட்டனர். 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அன்று இந்தச் சுற்றுச்சூழல் பிரச்சினைக்காக வீதியில் இறங்கிய மக்களுக்கு உங்கள் அரசாங்கம் கொடுத்த பதில் இதுதான்.ஆனால் இன்று நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் சுற்றுச்சூழல் பற்றியும், மக்களின் உரிமைகள் பற்றியும் பேசுகிறார்.
அன்று மீனவர்கள் போராட்டத்தில் ரொஷான் சானகவுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? சுட்டுக் கொன்றீர்கள்.அதனால் மக்களின் உரிமைகள் தொடர்பில் பேசுவதற்கு உங்களுக்கு உரிமையில்லை.மக்களின் அன்பும் மரியாதையும் இந்த அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டார்.