மொட்டுக் கட்சியில் புதிய வேட்பாளர் ஒருவரே களமிறக்கப்படுவார்: வெளியான அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சியின் சார்பில் புதிய வேட்பாளர் ஒருவரே களமிறக்கப்படுவார் என்று அக்கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (மொட்டுக்) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன(S. M. Chandrasena), ஊடக சந்திப்பொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பு மொட்டுக் கட்சியின் பத்தரமுல்லை தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
ஜனாதிபதி வேட்பாளர்
“தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கும் நிலையில் இப்போதே எங்கள் வேட்பாளர் குறித்து அறிவிப்பது பாதகமாக அமையலாம்.
தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்களில் சஜித் பிரேதமாச மற்றும் அனுர குமார ஆகியோர் சிக்கல்களில் மாட்டிக் கொண்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்போம்.
ஆனால் அவர் புதியவராக இருப்பார் என்பது மட்டும் உறுதி.” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
