யாழில் பொலிஸாரால் துரத்திச் சென்ற நபர் மின்கம்பத்தில் மோதுண்டு பலி
யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவனில் (Jaffna) பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் இன்று (10.05.2024) இரவு பதிவாகியுள்ளது.
விபத்தின் போது அப்பகுதியில் பொதுமக்கள் கூடியதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் குற்றச்சாட்டு
பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை மறித்துள்ளனர்.
இதன் போது அவர் நபர் தொடர்ந்து
பயணிக்கவே விரட்டி சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்த நபர் பயணித்த
மோட்டார் வண்டியை உதைத்து விழுத்தியதில் மின்கம்பத்தில் மோதி
உயிரிழந்தார் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலதிக தகவல்: கஜி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
