டயானாவின் கட்சி உரிமை இரத்து விவகாரம் : உச்ச நீதிமன்றின் உத்தரவு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானத்தை ஆட்சேபித்து அவர் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
குறித்த மனுவானது, இன்று (10.05.2024) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மனுதாரர் டயானா கமகே (Diana Gamage) சார்பில் முன்னிலையான சட்டத்தரணியால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய மனு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
மேலும், குறித்த மனுவில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa), ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) உள்ளிட்ட பலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அதேவேளை, முன்னதாகவே, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக கட்சி எடுத்த ஏகமனதான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமை காரணமாக டயானா கமகேவை கட்சியில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்தது.
இது கட்சியின் ஒழுக்கத்தை கடுமையாக மீறுவதாகவும், கட்சியின் நற்பெயர் அல்லது நல்வாழ்வு மற்றும் செழுமைக்காக அவரது கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 28 நிமிடங்கள் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
