பிரித்தானியாவின் அமைச்சரவை செயலாளராக அந்தோனியா ரோமியோ நியமிக்கப்படுவதில் சர்ச்சை
பிரித்தானியாவின் அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் டேம் அந்தோனியா ரோமியோ (Dame Antonia Romeo), நியூயோர்க்கில் சிரேஷ்ட இராஜதந்திரியாகப் பணியாற்றியபோது ஊழியர்களைத் துன்புறுத்தியதாகப் பல்வேறு முறைப்பாடுகள் எழுந்துள்ளன.
இது தொடர்பான ஆவணங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பத்தாண்டுகளுக்கு முன்பு நியூயோர்க்கிற்கான பிரித்தானிய தூதராக (Consul General) அந்தோனியா பணியாற்றியபோது, ஊழியர்களை "கேவலப்படுத்தும்" விதமாகவும், "மரியாதை குறைவாகவும்" அவர் நடத்தியதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குற்றம் சாட்டியுள்ள ஊழியர்கள்
குறிப்பாக, ஊழியர்களிடையே ஒரு விதமான பயத்தையும் கவலையையும் உருவாக்கும் சூழலை அவர் ஏற்படுத்தியதாக ஆவணங்கள் கூறுகின்றன. மேலும், அரசாங்கத்தின் நலனை விட தனது "சுய விளம்பரம்" மற்றும் சமூக வலைதளப் பதிவுகளில் அவர் அதிக ஆர்வம் காட்டியதாகவும் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஊழியர்களை அச்சுறுத்துதல் மற்றும் செலவீனங்களை முறையாகக் கையாளாதது தொடர்பான முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாகவும், முறைப்பாடுகளில் உண்மையில்லை என அவர் விடுவிக்கப்பட்டதாகவும் அமைச்சரவை அலுவலகம் (Cabinet Office) தெரிவித்துள்ளது.
ஒரே ஒரு அதிகாரப்பூர்வ முறைப்பாடு மட்டுமே வந்ததாக அரசாங்கம் கூறினாலும், உண்மையில் பல ஊழியர்கள் அவதிப்பட்டதாக முன்னாள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க்கில் அவர் பணியாற்றிய காலத்தில், சுமார் 47% ஊழியர்கள் பணியிடத்தில் துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். இது மற்ற துறைகளை விட மிகவும் அதிகமான விகிதமாகும்.

தற்போது உள்துறை அமைச்சகத்தின் (Home Office) சிரேஸ்ட அதிகாரியாக இருக்கும் அந்தோனியா ரோமியோ, சவாலான பணிகளைச் செய்து முடிப்பதில் திறமையானவர் என ஒரு தரப்பினரால் பாராட்டப்படுகிறார்.
இருப்பினும், இத்தகைய குற்றச்சாட்டுகள் அவர் சிவில் சேவை துறையின் மிக உயர்ந்த பதவியான அமைச்சரவை செயலாளராக (Cabinet Secretary) நியமிக்கப்படுவதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்ஸ்டீன் கோப்புக்களில் சிக்கியுள்ள விடுதலைப் புலிகளின் தலைவருடன் புகைப்படத்தில் இருக்கும் இந்திய அதிகாரி
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri