பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதில் பிரித்தானியாவின் நிலைப்பாடு
பலஸ்தீன அரசை உடனடியாக அங்கீகரிக்கும் நிலையில் பிரித்தானியா இல்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஆண்டு இறுதியில் பிரான்ஸ் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்திருந்தார்.
இதற்கு ஆதரவாக பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 200 பேர் ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
நீடித்த அமைதி
இந்நிலையில், தானும் நட்பு நாடுகளும் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருவதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், போர்நிறுத்தத்தை நீடித்த அமைதியாக மாற்றுவதற்கு தேவையான உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது அந்த படிகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில் அவரின் கருத்து தெளிவாக இல்லை.
பிரித்தானியாவின் நிலைப்பாடு
ஆனால், அது இறுதியில் இரு-அரசு தீர்வு மற்றும் பலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு நீடித்த பாதுகாப்பை விளைவிக்கும் ஒரு பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

துன்பப்படுபவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே எப்போதும் எங்கள் இறுதி இலக்காக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேலுடன் ஒரு பலஸ்தீன அரசு இணைந்து செயற்பட வேண்டும் என்பதே பிரித்தானியாவின் நிலைப்பாடாக நீண்ட காலமாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025