இஸ்ரேலுக்கு நெருக்கடியாக மாறும் ஐரோப்பிய நாடுகள்..!
காசாவிற்கு செல்லும் உதவிப் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை இஸ்ரேல் உடனடியாக நீக்க வேண்டும் என பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
உதவியை நிறுத்தி வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் குறித்த நாடுகள் தெரிவித்துள்ளன.
காசாவில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் ஒன்பது பேர் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் இறந்துள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு உதவிகளை விமானம் மூலம் காசாவிற்குள் அனுப்ப அனுமதிக்கப்படும் என இஸ்ரேல் கூறி வருகின்றது.
இஸ்ரேலின் தந்திரோபாயம்
ஆனால், இது இஸ்ரேல் கூறும்படி நடக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஹமாஸின் பிடியில் உள்ள பணயக்கைதிகளை மீண்டும் தன் நாட்டிற்கு அழைத்துவர இஸ்ரேல் உதவிகளை தடுக்கும் தந்திரோபாயத்தை பயன்படுத்துவதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.
இந்நிலையிலேயே, காசாவிற்குள் செல்லும் உதவிப்பொருட்கள் உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்துகின்றன.
முன்னதாக, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பாலஸ்தீன மாநிலத்தை அங்கீகரிப்பதாக உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



