பில்லியனர்கள் பட்டியலில் இடம்பிடித்த கூகுள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை
கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு1.1 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.9 ஆயிரம் கோடி) டொலராக உயர்ந்து உள்ளது.
மேலும் போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலும் சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு ரூ. 1.2 பில்லியனாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கோடீஸ்வரர் பட்டியல்
இதன் மூலம் மிகப்பெரிய கோடீஸ்வரர் பட்டியில் சுந்தர் பிச்சை இடம் பிடித்து உள்ளார்.
ஒரு நிறுவனத்தின் நிறுவனராக இல்லாத தலைமை நிர்வாக அதிகாரி ஒருவர் பில்லியனர் ஆவது என்பது மிகவும் அரிதான சாதனையாகும்.
பெரும்பாலான Big Tech நிறுவனங்களின் நிறுவர்களைப் போல இல்லாமல், பிச்சை நிறுவனம் தொடக்கத்தில் பங்குகள் பெரிதாக வைத்திருக்கவில்லை என்பதாலும், அவருடைய சொத்து மதிப்பு மாபெரும் அளவில் இல்லை.
ஆனால் Alphabet நிறுவனத்தின் பங்கு விலை அண்மையில் 13% உயர்ந்ததைத் தொடர்ந்து, அவருடைய சொத்து மதிப்பு பெரிதும் உயர்ந்துள்ளது.
சுந்தர் பிச்சை
10 வருடங்களாக CEO ஆக இருக்கும் சுந்தர் பிச்சை ஊதியத்தின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்துள்ளார்.அதாவது சுமார் $650 மில்லியன் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளார்.
அவைகளை இன்று வைத்திருந்தால் $1 பில்லியனுக்கு மேல் கிடைக்கும் வகையில் இருந்திருக்கும் என Bloomberg Billionaires Index தெரிவிக்கிறது.
இதன் அடிப்படையில் அவர் $2.5 பில்லியன் வரை சொத்துக்கள் வைத்திருக்கக்கூடியவராக இருந்திருப்பார்.
ஜூன் மாதம் பிச்சை Alphabet Class பங்குகளில் 33,000 பங்குகளை ஒன்றுக்கு $169 விலையில் விற்றுள்ளார்.
நடுத்தர குடும்பம்
இது $5.5 மில்லியன் அளவுக்கு விற்பனையாகியிருந்தது. ஆனால் தற்போது அந்த பங்குகள் ஒன்றுக்கு $193 அளவுக்கு உயர்ந்துள்ளன.
எனவே பங்குகளை விற்காமல் இருந்திருந்தால் அவை $6.4 மில்லியனாக இருக்க வாய்ப்பு இருந்தது.
தமிழ்நாட்டில் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர் 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து 2015-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



