தீவிரம் அடையும் மத்திய கிழக்கு போர் - விமான கட்டணங்களில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்
மத்திய கிழக்கு பதற்றத்திற்கு மத்தியில் விமான எரிபொருள் விலை 86 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதால் நாட்டின் சுற்றுலாத் துறை பாரிய பின்னடைவைச் சந்திக்க நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திடீர் விலை உயர்வு சுற்றுலாத்துறையை நம்பியிருக்கும் பல தரப்பினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10ஆம் திகதி வரை 2.29 அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட விமான எரிபொருள் விலை, தற்போது 4.26 டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.
விமான போக்குவரத்து செலவு
இந்த விலை மாற்றம் சர்வதேச விமான போக்குவரத்து செலவுகளை நேரடியாகப் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பால் விமான பயணச்சீட்டுகளின் விலைகள் உயரக்கூடும் அல்லது இலங்கைக்கான விமானப் பயணங்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுற்றுலாத்துறையானது ஹோட்டல்களை மாத்திரம் சார்ந்தது அல்லாமல், அதனை நம்பியுள்ள பல சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகங்களையும் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளது.
பயணிகள் வருகை
எனவே, விமான எரிபொருள் விலை உயர்வு இத்துறையில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வேலைவாய்ப்புகளுக்கும் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும்.

கடந்த டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 258,928 பயணிகள் வருகை தந்துள்ள நிலையில், தற்போதைய விலை உயர்வு இந்த வளர்ச்சியைப் பாதிக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறானதொரு சூழலில், விமான எரிபொருள் விலையை ஓரளவேனும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்தால், அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு ஈர்க்க முடியும் என பொருளாதார நிபுணர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam