பரபரப்பை ஏற்டுத்தும் சிறைக்கலவரங்கள்.. மட்டக்களப்பு சிறையில் தயார்நிலையில் அதிகாரிகள்!
நாட்டின் பல சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சிறைச்சாலை பகுதியை சுற்றி பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் நீர்கொழும்பு சிறையில் வெடித்த மோதலைத் தொடர்ந்து, அங்குள்ள கைதிகள் குழுவை பல்லன்சேன திறந்தவெளி சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
சிறைகளில் பதற்றம்..
இதற்கிடையில், நேற்று இரவு (06) மெகசின் சிறையில் வெடித்த கலவரம் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது, அங்கு ஒரு கைதி உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த 11 கைதிகளை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது, அதில் ஒரு கைதி உயிரிழந்தார்.
இன்று காலை (07) குருவிட்ட சிறைச்சாலையிலும் அமைதியின்மை நிலவியது. இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், மற்றொரு குழுவினர் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகள் குழு ஒன்று சிறை மருத்துவமனையையும் சேதப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, தற்போது, மட்டக்களப்பு சிறைச்சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.