பல்லன்சேன சிறைச்சாலையில் நிலவிய பதற்றம் கட்டுப்பாட்டுக்குள்..! அதிரடியாக களமிறங்கிய அதிகாரிகள்

Sri Lanka Police Negombo
By Dhayani Aug 07, 2026 10:11 AM GMT
Report

புதிய இணைப்பு 

நீர்கொழும்பில் உள்ள பல்லன்சேன சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைக்கைதிகள் காலை உணவு நேரத்தில் சிறையில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதுடன், இதன்போது நிலைமையை கட்டுப்படுத்த வந்த பாதுகாப்புப்படையினர் மீது கற்களை வீசித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது சுமார் 30 கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சில மணி நேரங்களுக்கு பின்னர், பாதுகாப்புப் படையினர் அவர்களை கீழே இறக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் தற்போது முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மூன்றாம் இணைப்பு

நீர்கொழும்பு - பல்லன்சேன சிறைச்சாலையில் நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதிகள் தற்போது அதிகாரிகள் மீது கற்களை வீசி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிறைச்சாலையின் பிரதான வாயிற்கதவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

சிறையில் இடப்பற்றாக்குறை மற்றும் சுகாதார வசதிகள் இல்லாததாலும், வழக்குகளை விரைவாக முடிக்கக்கோரியும் தமக்கு விரைவில் பிணை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இன்று (07) வெள்ளிக்கிழமை காலை முதல் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 இரண்டாம் இணைப்பு 

கைதிகள் குழுவினர் கூரையின் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, நீர்கொழும்பு மாவட்டம் தலுபோத்தாவில் உள்ள பல்லன்சேன திறந்தவெளிச் சிறையைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்காக பொலிஸார், பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை, கலவரக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விமானப்படை ஆகியவை வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை (07) கைதிகள் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, மாடியில் கலவரம் வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் நீர்கொழும்பு சிறையில் வெடித்த மோதலைத் தொடர்ந்து, அங்குள்ள கைதிகள் குழுவை பல்லன்சேன திறந்தவெளி சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

பல்லன்சேன சிறைச்சாலையில் நிலவிய பதற்றம் கட்டுப்பாட்டுக்குள்..! அதிரடியாக களமிறங்கிய அதிகாரிகள் | Unrest At Pallansena Prison

இதற்கிடையில், நேற்று இரவு (06) மெகசின் சிறையில் வெடித்த கலவரம் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது, மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த 11 கைதிகளை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது, அதில் ஒரு கைதி உயிரிழந்தார். இன்று காலை (07) குருவிட்ட சிறைச்சாலையிலும் அமைதியின்மை நிலவியது.

இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், மற்றொரு குழுவினர் மருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகள் குழு ஒன்று சிறை மருத்துவமனையையும் சேதப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முதலாம் இணைப்பு 

நீர்கொழும்பு - பல்லன்சேன சிறைச்சாலையிலும் சற்றுமுன்னர் அமைதியின்மை நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், கைதிகள் குழு ஒன்று கூரையின் மீது ஏறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு பல பொலிஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மெகசின் மற்றும்  குருவிட்ட சிறையிலும் பதற்றம்

இதற்கிடையில், நேற்று இரவு (06) மெகசின் சிறையில் கலவரம் வெடித்த நிலையில், தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பல்லன்சேன சிறைச்சாலையில் நிலவிய பதற்றம் கட்டுப்பாட்டுக்குள்..! அதிரடியாக களமிறங்கிய அதிகாரிகள் | Unrest At Pallansena Prison 

இதில் 11 கைதிகள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், இன்று காலை கைதி ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இதனையடுத்து இன்று காலை முதல் (07) குருவிட்ட சிறையிலும் கலவரம் வெடித்துள்ளதுடன், இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், மற்றொரு குழுவினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நீர்கொழும்பு சிறையில் வெடித்த மோதலைத் தொடர்ந்து, அங்குள்ள கைதிகள் குழுவை பல்லன்சேன திறந்தவெளி சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.      

குருவிட்ட சிறைச்சாலையில் தீவிரமடையும் பதற்றநிலை! அவசரமாக விரையும் முக்கிய அதிகாரிகள்

குருவிட்ட சிறைச்சாலையில் தீவிரமடையும் பதற்றநிலை! அவசரமாக விரையும் முக்கிய அதிகாரிகள்

 

பொரளை மெகசின் சிறைச்சாலையில் பதற்றநிலை..! சிக்கிய மர்மப்பொதி - பின்னணியில் வெளியான காரணம்

பொரளை மெகசின் சிறைச்சாலையில் பதற்றநிலை..! சிக்கிய மர்மப்பொதி - பின்னணியில் வெளியான காரணம்

you may like this video


நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US