குருவிட்ட சிறைச்சாலையில் தீவிரமடையும் பதற்றநிலை! அவசரமாக விரையும் முக்கிய அதிகாரிகள்
இரத்தினபுரி - குருவிட்ட சிறைச்சாலைக்குள் இன்று (7) காலை ஏற்பட்டுள்ள மோதல் நிலைமையை கட்டுப்படுத்த சிறைத்துறையின் மூத்த அதிகாரிகள் குழுவொன்று தற்போது குருவிட்ட சிறைக்குப் புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், கலவரம் காரணமாக குருவிட்ட சிறைச்சாலையை சுற்றியுள்ள அனைத்து வீதிகளும் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்றநிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், இன்று (7) காலை மீண்டும் சிறைச்சாலைக்குள் கைதிகளால் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
குருவிட்ட சிறைச்சாலையில் பதற்ற நிலை! இருவர் உயிரிழப்பு - நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம்
பொலிஸாரினால் கண்ணீர்புகை பிரயோகம்
குறித்த சம்பவத்தில் 2 கைதிகள் உயிரிழந்த நிலையில், 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸாரினால் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, சிறைக்கு வெளியே பாதுகாப்பிற்காக பொலிஸ் குழுக்கள், பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை மற்றும் இராணுவக்குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சிறைத்துறையின் மூத்த அதிகாரிகள் குழு ஒன்று தற்போது குருவிட்ட சிறைக்குப் புறப்பட்டுள்ளது.