உயிராபத்து ஏற்படலாம்..! சாரதிகளுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை
வாகனங்களை செலுத்தும் போது சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வாகனங்களை செலுத்தும் போது காணொளிகளை பார்ப்பதை தவிர்க்குமாறும், சில வினாடி கவனச்சிதறல் கூட பாரிய உயிராபத்துகளுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
பொது பாதுகாப்பு தொடர்பான விசேட செய்தியொன்றை வெளியிட்டு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை
காணொளியினால் சில வினாடிகள் வீதியிலிருந்து கவனம் திசை திருப்பப்படுவதனால் ஆபத்தை உணர்ந்து அதிலிருந்து தப்பிப்பதற்கான நேரத்தை இழக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

அத்துடன், சாரதிகள் தங்களது உயிரை மட்டுமன்றி பயணிகள், பாதசாரிகளின் உயிர்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்புடையவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
"இழந்த உயிரை மீண்டும் பெற முடியாது" என்றும் வீதியை பயன்படுத்தும் அனைத்துத் தரப்பினரும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குருவிட்ட சிறைச்சாலையில் பதற்ற நிலை! இருவர் உயிரிழப்பு - நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம்