இஸ்ரேலிய அமைச்சர்களை தடை செய்த பிரித்தானியா
தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அமைச்சர்களான பெசலெல் ஸ்மோட்ரிச் மற்றும் இடமர் பென்-க்விர்(Itamar Ben-Gvir and Bezalel Smotrich) ஆகியோருக்கு எதிரான தடையை பிரித்தானியா விதித்துள்ளது.
குறித்த அமைச்சர்கள் பிரித்தானியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்படுவதோடு அங்கு அவர்களின் சொத்துக்கள் இருப்பின் அவை முடக்கப்படும்.
மேற்குக் கரையில் பலஸ்தீன மக்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவித்தமைக்காக இந்தத் தடையை விதிக்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது.
இஸரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கத்தின் பகுதியாக இருக்கும் மேற்குறிப்பிட்ட அமைச்சர்கள், காசாவிற்கு உதவி செய்வதைத் தடுத்ததோடு பாலஸ்தீனியர்களை அந்தப் பகுதியிலிருந்து அகற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.
வர்த்தகப் பேச்சுவார்த்தைகள்
இதன் காரணமாக இவர்கள் இருவரும் சர்வதேச ரீதியாக கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகினர்.
அவர்களின் வார்த்தைகளும் செயல்களும் கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைக்கு வழிவகுத்ததாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானத்தில் கனடா, அவுஸ்திரேலியா, நோர்வே மற்றும் நியூஸிலாந்து போன்ற பிற நாடுகளும் பிரித்தானியாவுடன் இணைந்துள்ளன.
பிரித்தானியா சமீபத்தில் இஸ்ரேலுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை முடித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
