கைது செய்யப்பட்ட பிரித்தானிய யுவதி தொடர்பில் நடவடிக்கையில் இறங்கியுள்ள வெளியுறவு அலுவலகம்
2025 மே 12 அன்று போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறப்பட்டு, கைது செய்யப்பட்ட21 வயதான பிரித்தானிய யுவதி தொடர்பில், பிரித்தானியாவின் வெளியுறவு அலுவலகம், இலங்கை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து வந்த இந்த பிரித்தானிய யுவதியிடம் இருந்து குஷ் ரக போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
மேலதிக விசாரணை
சுங்க அதிகாரிகளின் கூற்றுப்படி, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த எடை 46 கிலோகிராம் அதாவது 460 மில்லியன் ரூபாய் பெறுமதி கொண்டது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அண்மைக்காலத்தில் இலங்கையில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய குஷ் பறிமுதல்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது.
இந்தநிலையில், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களுடன் சந்தேக நபரும், மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri
