பிரேசிலில் நடுவானில் திடீரென வெடித்து சிதறிய விமானம்: 5 பேர் பலி
பிரேசிலில் மினாஸ் ஜெரைஸ் என்ற மாகாணத்தில் சிறிய ரக விமானமொன்று விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசிலில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து உடனடியாக விமானத்திலிருந்து கடைசியாக சிக்னல் கிடைத்த இடத்திற்கு மீட்பு படையினர் மற்றும் பொலிஸார் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெடித்து சிதறிய விமானம்
இதன்போது விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளதுடன், நடுவானிலேயே விமானம் வெடித்து சிதறியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 2 பேர் மாயமாகியுள்ளதாக கூறப்படுகின்றது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் புயலுடன் கூடிய கனமழையே இந்த விபத்திற்கான காரணம் என கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
