மோட்டார் சைக்கிள்களில் சாகசம் காட்டிய இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்
மோட்டார் சைக்கிளை செலுத்திக்கொண்டு கையடக்கத் தொலைபேசியில் டிக் டொக் காணொளியை எடுக்க முயற்சித்த இளைஞர்கள் காரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந்த விபத்து ஹொரணை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தலங்கம பிரதேசத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் 4 மோட்டார் சைக்கிள்களுடன் கொழும்பு பிரதேசத்தில் இருந்து ஹொரணை பிரதேசத்தை நோக்கி பயணித்துள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளை அதிக வேகத்தில் செலுத்தி காணொளி எடுக்க முனைந்த போது இரு இளைஞர்கள் செலுத்திய மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் கார் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
குறித்த விபத்தில் காயமடைந்த இரு இளைஞர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 5 இளைஞர்களில் 2 இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் , ஏனைய 2 இளைஞர்கள் 3 மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளுடன் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹஹேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam
