அக்குரேகொட உயர் பாதுகாப்பு வலயம் அல்ல: நாடாளுமன்றத்தில் அமைச்சர் வெளிப்படுத்திய தகவல்
சமீபத்தில் அக்குரேகொடவில் வழக்கறிஞர் புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட பகுதி உயர் பாதுகாப்பு வலயம் அல்ல என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (17) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளித்த போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவியின் உறவினர்களுக்கும் அமைச்சர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பின் தாக்கம்
இது ஒரு தனிமைப்பட்ட பிரச்சினை என்றும் தேசிய பாதுகாப்பில் எந்த தாக்கமும் இல்லை என்றும்,இந்த சம்பவத்தால் தேசிய பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக சித்தரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த கொலையை ஒருபோதும் சட்டத்தின் ஆட்சிக்கு அச்சுறுத்தலாகக் கருதக்கூடாது என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
"இந்த நாட்டில் யாருடைய உயிரையும் நாங்கள் குறைத்து மதிப்பிடுவதில்லை. யாருடைய கைகளாலும் யாரும் இறப்பதை நாங்கள் அங்கீகரிக்கவில்லை.ஒரு அரசாங்கமாக, அனைவரின் உயிரையும் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
புழக்கத்தில் ஏராளமான ஆயுதங்கள்
அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. சமூகத்தில் ஏராளமான ஆயுதங்கள் புழக்கத்தில் உள்ளன.

கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் நான் பணியாற்றி வருகிறேன்.
மேலும், சில இராணுவ முகாம்களால் பாதாள உலகத்திற்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்படும் சூழலில் இதுபோன்ற கொலைகள் நடைபெறுகின்றன.
இவ்வாறான கொலை கலாச்சாரத்தை நாங்கள் கண்டிக்கிறோம். மேலும் எங்கள் வருத்தத்தை மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்." என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடம் மண்டியிட்ட பாகிஸ்தான்: விரக்தியில் டிவியை போட்டுடைத்த ரசிகர்: வைரல் வீடியோ News Lankasri