பிரேசிலில் விமான விபத்து: 7 பேர் பலி
பிரேசிலில் இடம்பெற்ற விமான விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தானது நேற்று(28.01.2024) இடம்பெற்றுள்ளது.
பிரேசிலின் அண்டை நாடான சாவ்பாலோ காம்பினாவில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் பிரேசிலின் தென்கிழக்கு மினாஸ்ரைசுக்கு பயணத்தை ஆரம்பித்துள்ளது.
மீட்பு பணி
இதன்போது பிரேசிலின் சுரங்க நகரமான இட்டா பேலா மீது விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த விமானி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது வரை இறந்த 3 பேரின் உடல்களை மீட்பு படையினர் மீட்டுள்ளதோடு மற்றவர்களின் உடல்களை தேடும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri