மன்னாரில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செளத்பார் பகுதியில் கைவிடப்பட்ட அட்டை பண்ணை ஒன்றில் இருந்து 31 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை இன்று (29.01.2024) மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் சுற்றிவளைப்பு
மன்னார் பொலிஸ் குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபால அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் அத்தியட்சகர் ஹாரத்தின் ஆலோசனையின் பெயரில் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சில்வா தலைமையிலான குழுவினர் செளத்பார் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 31 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
போதை மாத்திரைகளுடன் ஏற்கனவே 8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.இந்த நிலையில் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் செளத்பார் பகுதியில் போதை மாத்திரைகள் விற்க முற்பட்ட இளைஞர் ஒருவர் இன்று (29) மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.
இதன்போது இளைஞனிடன் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் செளத்பார் தொடருந்து நிலைய பகுதி அருகில் கைவிடப்பட்ட அட்டை பண்ணை கொட்டில் ஒன்றிலே சூட்சுமமான முறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 31 ஆயிரம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam