மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்ததான முகாம்
தாய் நாட்டின் சமாதானம் கருதி உயிர் நீத்த இலங்கையர்களை நினைவு கூர்ந்தும்,உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்ததான முகாம் இடம்பெற்றுள்ளது.
இராணுவத்தின் 543 ஆவது படைப்பிரிவு ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் இன்று சனிக்கிழமை (14) காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.
இரத்த தானம்
இதன்போது, தள்ளாடி,கள்ளியடி,மாதோட்டம்,பேசாலை ஆகிய இராணுவ முகாம்களை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ சிப்பாய்கள் இரத்த தானம் செய்துள்ளனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியின் உதவியுடன் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம். கணீபா,மன்னார் நகர பிரதேச செயலாளர் எம்.பிரதீப்,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் உதவி பணிப்பாளர் வைத்தியர் கில் றோய் பீரிஸ்,மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட்,தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் சமந்த விஜயரத்தின, உள்ளடங்களாக இராணுவ அதிகாரிகள்,வைத்தியர்கள்,இராணுவத்தினர்,வைத்தியசாலை பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
