கொழும்புக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் தாயின் வீட்டில் மர்மமான முறையில் மரணம்
பதுளையில் காணாமல் போன வங்கி அதிகாரியின் சடலம் அவரது தாயாரின் கைவிடப்பட்ட வீட்டில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பிபில்ல, யல்கும்புர பகுதியை சேர்ந்த 28 வயதுடைய திருமணமானவராகும். அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.
உயிரிழந்தவர் விடுமுறையில் தனமல்வில பகுதியில் வங்கி அதிகாரியாக செயற்படும் தனது மனைவியை பார்க்கச் சென்றிருந்தார். பின்னர், பதுளையில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்கும் சென்று அங்கு தங்கியிருந்தார்.
தாயின் வீடு
அதன் பிறகு, வேலைக்காக கொழும்புக்கு செல்வதாக கூறி பதுளையில் உள்ள தனது தாயாரின் வீட்டை விட்டு வெளியேறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்புக்கு செல்வதாக கூறிய போதிலும், அவர் கொழும்பை சென்றடையவில்லை.

கையடக்க தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காததால், குடும்ப உறுப்பினர்கள் கொழும்பு மற்றும் பல்வேறு பகுதிகளில் அவரைத் தேடி, ராகம மற்றும் பதுளை பொலிஸிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அவரது சொந்த ஊரான பிபில்ல பகுதியிலும் அவர் தேடப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அவரது சொந்த ஊரைச் சேர்ந்த மக்களும் அவரை அந்தப் பகுதி முழுவதும் தேடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கண்டுபிடிப்பு
பின்னர், அவரது சொந்த ஊரில் கைவிடப்பட்ட வீட்டில் நாய் குரைப்பதைக் கண்ட ஒருவர், ஜன்னலைத் திறந்து பார்த்த போது, வீட்டியில் தொங்கிய நிலையில் ஒரு சடலத்தை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் காணாமல் போன இளைஞனின் சடலம் என கண்டுபிடித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தேடி வருகின்றனர்.
    
    
    
    
    
    
    
    
    
    தேவகியாக, எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகையின் நிஜ அம்மா தான் நடிக்கிறாரா?... வெளிவந்த சுவாரஸ்ய தகவல் Cineulagam