இலங்கையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையின் பின்னணி! அமெரிக்காவில் இருந்து செயற்படும் பெரும்புள்ளி
அரசாங்கத்திற்கு எதிராக சில அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் பின்னணியில் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கி வருபவர் பசில் ராஜபக்சவின் நெருங்கிய நண்பரான முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவிற்கு தப்பிச் சென்று நீதிமன்றத்தை தவிர்த்து வரும் பசில் ராஜபக்சவை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்
இதனைத் தொடர்ந்து, சில தொழிற்சங்கங்களும் பல்வேறு குழுக்களும் இணைந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்திருந்தன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு நீதிமன்றத்தினால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரச புலனாய்வு சேவைகளின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தமை மற்றும் அதற்கு சமாந்தரமாக பல்வேறு போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது.
அதனைப் போன்றே, தற்போதும் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நடத்திய போராட்டம் மற்றும் பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட தரப்பினர் நடத்திய போராட்டங்கள் என்பன இதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளாக அமைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டிள்ளனர்.
தமிழ் வர்த்தகரை அச்சுறுத்தி கொள்ளையடித்த விவகாரம்! சம்பத் மனம்பேரி உள்ளிட்ட நால்வருக்கு பிறப்பிக்கப்படவுள்ள தீர்ப்பு