இலங்கையில் வட்டியில்லா கடன்! ஆகஸ்ட் 7ஆம் திகதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு
இலங்கையில் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு தகுதியானவர்களை உடன் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தை (IFSL) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.
இந்தத் திட்டம் தகுதியுள்ள மாணவர்களுக்கு வட்டியில்லா நிதி உதவியைப் பெறுவதற்கு வாய்ப்பை வழங்குகிறது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 7ஆம் திகதிக்குள் தகுதியுள்ள அனைவரையும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு அமைச்சு அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.
விரைவில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தல்
IFSL திட்டம் குறிப்பாக 2019, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் A/L தேர்வை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனவே வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடைய மாணவர்கள் www.studentloans.mohe.gov.lk என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது திட்டம் தொடர்பான கையேட்டினை தமிழில் பார்வையிட (Click Here), ஆங்கிலத்தில் பார்வையிட (Click Here)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |