900,000 ரூபா வட்டியில்லா கடன்! நாளாந்த செலவுக்காக 300,000 ரூபா - அரசாங்கத்தின் திட்டம் குறித்து புதிய அறிவிப்பு
தனியார் பல்கலைக்கழக கல்விக்கு வட்டியில்லாக் கடனுதவி வழங்குவதற்கான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ருவன்வெல்லவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வட்டியில்லாக் கடனுதவி
அவர் மேலும் தெரிவிக்கையில், க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த போதிலும் அரச பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் வாய்ப்பை பெறத் தவறிய ஐயாயிரம் மாணவர்களுக்கு வருடாந்தம் வழங்கப்படவுள்ள வட்டியில்லாக் கடனுதவி தொடர்பான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.
இந்தக் கடன் திட்டத்தின் கீழ் படிப்பதற்கு 900,000 ரூபா வட்டியில்லா கடன் கிடைக்கும். நாளாந்த செலவுக்காக 300,000 ரூபாவும் கிடைக்கும்.
படிப்பு முடிந்ததும், இந்தக் கடனை வட்டி இல்லாமல் திருப்பிச் செலுத்த இன்னும் இரண்டு ஆண்டுகள் வழங்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
You may like this video
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |