இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி மூலம் வட்டியில்லா கடன்! கிடைத்தது அனுமதி
இலங்கையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா கடன் தொடர்பான யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அரசு சாரா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக வட்டியில்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் 7ஆவது குழுவை இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி முழுமையான கடன் காலப்பகுதிக்கான 13% வீத குறைந்த வட்டி வீதத்தைப் பேணி இக்கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சரின் யோசனை
அதற்கமைய, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் உயர்தரம் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களில் பொருத்தமான தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள மாணவர்களை 7ஆவது அணியின் கீழ் வட்டியில்லாத மாணவர் கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |