இலங்கைக்கு வரவிருந்த கப்பலில் அபாயகரமான பொருட்கள் : அமெரிக்க பாதுகாப்பு சபை அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவில் (America) விபத்துக்குள்ளாகிய இலங்கை வரவிருந்த சிங்கப்பூர் (Singapore) சரக்குக் கப்பலில் 764 டொன் அபாயகரமான பொருட்களை இலங்கைக்கு ஏற்றிச் செல்ல முயற்சித்துள்ளதாக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த சரக்கு கப்பலானது, கடந்த மார்ச் 26ஆம் திகதியன்று அமெரிக்க பால்டிமோர் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பெரும்பாலும் எரியக்கூடிய பொருட்கள், அபாயகரமான பொருட்கள், வெடிபொருட்கள் மற்றும் லித்தியம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய 56 கொள்கலன்கள் ஏற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கப்பலின் கொள்கலன்கள்
எனினும், ஏனைய 4,644 கொள்கலன்களில் என்ன இருந்தது என்பது இன்னும் தெரிய வராதுள்ள நிலையில் இந்த கப்பலின் அடுத்த பயன திட்டமிடலானது கொழும்பிற்கே (Colombo) விடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி, தென்னாப்பிரிக்காவின் (South Africa) கேப் ஒஃப் குட் (Cape of Good) ஹோப்பைச் சுற்றி, 27 நாட்களை கடத்தி புத்தாண்டுக்குப் பின்னர் கப்பல் இலங்கையை அடைய திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள நீர்நிலைகள், சுழியோடிகள் பாதுகாப்பற்றவை என அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |