பாகிஸ்தானில் அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பள விரிப்புக்கு தடை
பாகிஸ்தானில் செலவினங்களை குறைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செலவுகளை நிறுத்தும் வகையில் அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் ஷெரீப்பின் உத்தரவின்கீழ் இந்த தடை நடைமுறைக்கு வரும் என அமைச்சரவை பிரிவு அறிவித்துள்ளது.
பொருளாதார மீட்பு நடவடிக்கை
மத்திய மந்திரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் வருகையின்போது இவற்றை பயன்படுத்துவது இனி நிறுத்தப்படுவதோடு, அரசு நடைமுறையின்படி வெளிநாட்டு தலைவர்கள் வருகையின்போது சிவப்பு கம்பளங்கள் பயன்படுத்தப்படும் என கூறப்படுகின்றது.
பாகிஸ்தானின் பொருளாதார மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் தங்களுடைய சம்பளம் மற்றும் பிற பலன்களை விருப்பத்துடன் விட்டு கொடுப்பது என கடந்த வாரம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானின் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியும் தன்னுடைய சம்பளம் மற்றும் பிற பலன்களை விட்டு கொடுப்பது என்ற முடிவை எடுத்திருக்கிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |