எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம் : வெளிவந்துள்ள தகவல்
பேரழிவிற்கு வழிவகுத்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் பணியாளர்களின் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் பல்வேறு குறைபாடுகளை சிங்கப்பூரின் போக்குவரத்து பாதுகாப்பு புலனாய்வுப் பணியகம் கண்டறிந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
கட்டாரில் உள்ள ஹமாத் துறைமுகத்தில் முதன் முதலில் கசிவு கண்டயப்பட்ட பின்னரும் பணியாளர்கள் சரக்குகளின் விபரங்களை சரிபார்க்காமல் கசிவைக் கட்டுப்படுத்துவதற்காக பணியாளர்கள் மரத்தூளை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கொள்கலனில் இருந்து வெளியான நைட்ரிக் அமிலத்தின் கசிவுக்கான காரணத்தைக் கண்டறிய விரிவான ஆய்வும் முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
பணியாளர்களின் கவனயீனம்
கொள்கலனை இறக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், பணியாளர்கள் இதனை விரைவாக செய்யப்படுவதை உறுதி செய்வதற்கான ஒருங்கிணைந்த முயற்சித்திருக்கவில்லை.
அது மாத்திரமன்றி, கொள்கலனை இறக்குவதற்காக கப்பல் தலைவரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையையும் துறைமுகங்கள் ஆதரித்திருக்கவில்லை.
இதன்போது, போதுமான தகவல் அல்லது நைட்ரிக் அமிலம் கசியும் கொள்கலனைக் கையாளும் திறன் போதுமானதாக இல்லை எனவும் நிறுவனத்திற்கும் துறைமுகங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு சிறப்பாக இருந்திருக்கலாம் எனவும் சிங்கப்பூர் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு துறைமுகம்
அவசரநிலையின் ஆரம்ப கட்டத்தில், சரக்குகள் இருப்பில் உள்ள சூழ்நிலையைப் பற்றிய துல்லியமான தகவலைச் சேகரிக்கவும், முன்னிலையில் தீயை எதிர்த்துப் போராடவும், பணியாளர்கள் யாரும் சுயமான சுவாசக் கருவி மற்றும் தீயணைப்பு வீரர்களின் ஆடைகளை அணிந்திருக்கவில்லை.
மேலும், தீயை அணைக்கும் விடயத்தில் தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படவில்லை
அத்துடன் தீக் கட்டுப்பாட்டை மீறுவதற்கு முன்னர் அவசரமாக நிறுத்தப்படுவதற்கு
பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோது, கொழும்பு துறைமுக கட்டுப்பாட்டில்
இருந்து கப்பல் தலைவருக்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் சிங்கப்பூரின்
போக்குவரத்து பாதுகாப்பு விசாரணை பணியகம் கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
