யாழில் கார்த்திகைப்பூ வடிவில் இல்ல அலங்கரிப்பு: பொலிஸார் விசாரணை
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியின் இல்ல அலங்கரிப்பு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யூனியன் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்றைய தினம் (30.3.2024) சனிக்கிழமை நடைபெற்றது.
அதன் போது, கார்த்திகைப் பூ வடிவிலும், போர் டாங்கி வடிவிலும் இல்ல அலங்கரிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கார்த்திகைப்பூ அலங்காரம்
இந்நிலையில், இல்ல அலங்காரம் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு தெல்லிப்பழை பொலிஸார் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை (31) காலை 9 மணிக்கு பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு ஆசிரியர்களும் மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டி தளத்தில் கார்த்திகைப்பூ அலங்காரம் செய்யப்பட்டிருந்ததன் அடிப்படையிலேயே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri